கமுதியில் 35 கண்காணிப்பு கேமராக்கள்: போலீஸார் வாகனச் சோதனை தீவிரம்

கமுதி எட்டுக்கண் பாலம் மும்முனை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்.
கமுதி எட்டுக்கண் பாலம் மும்முனை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்.
Updated on
1 min read

கமுதி பகுதிகளில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், கண்ணார்பட்டி, அரசு அலுவலகங்கள் உள்ள கோட்டைமேடு, அருப்புக்கோட்டை சாலை, கமுதி - சாயல்குடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் 35 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பேருந்து நிலையத்தில் உள்ள காவல் சோதனைச்சாவடி, கமுதி காவல் நிலையம் ஆகிய இடங்களில் கணினி மூலம் போக்குவரத்து நெரிசல் அறிவிப்பு மற்றும் விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பித்து ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குள் நுழைவோரை எளிதில் கண்டறிய இந்தக் கேமராக்கள் பயன்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in