விபத்தில்லா தீபாவளி சென்னையில் 40 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தீயணைப்பு அதிகாரி தகவல்

விபத்தில்லா தீபாவளி சென்னையில் 40 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தீயணைப்பு அதிகாரி தகவல்
Updated on
1 min read

பாதுகாப்பாக, ‘விபத்தில்லா தீபாவளி’ கொண்டாட வலியுறுத்தி, சென்னையில் தீயணைப்புத் துறை சார்பில் பள்ளிகள் உட்பட 40 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:

பட்டாசு வெடிப்பதால் காயம் அடைபவர்கள் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் அதிகம். விபத்தில்லாமல், பாதுகாப்பாக தீபாவளி கொண் டாடினால் மட்டுமே பண்டிகையின் மகிழ்ச்சி நிலைக்கும். இதை நோக்கமாகக் கொண்டு ‘விபத் தில்லா தீபாவளி’ என்ற தலைப்பில் சென்னை முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

வரும் 6-ம் தேதி சேத்துப்பட்டு கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி, 7-ம் தேதி மேற்கு முகப்பேர் ஜெ.ஜெ. நகர் வேலம்மாள் பள்ளி, 9-ம் தேதி கிழக்கு முகப்பேர் டி.எஸ்.கிருஷ்ணா நகர் வேலம்மாள் பள்ளியில் பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த 3 இடங்களுக்கும் ராட்சத ‘ஸ்கை லிப்ட்’ மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும்.

சென்னையில் மொத்தம் 40 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் 37 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ் வொரு நிலையத்தின் சார் பிலும் ஏதாவது ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துமாறு கூறப்பட்டுள்ளது. இதில் பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப் பது, காயம் ஏற்பட்டால் முதலுதவி செய்வது, விபத்து ஏற்படுத்தும் காரணிகள் உட்பட பல விஷயங்கள் குறித்து மாண வர்களுக்கு கற்றுத் தரப்படும். இதுதவிர, பொது இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத் தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in