Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

நீர்ப்பாசன விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக காவிரி வழித்தடத்தில் 31 பணிகளுக்கு ரூ.3,159 கோடி ஒதுக்கி அரசு ஒப்புதல்: விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரத்துக்கு அமைச்சரவை இசைவு

காவிரி துணைப்படுகையில் நீர்ப்பாசன விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக ரூ.3,159 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 31 தொகுப்பு பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதற்கும் விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சார விநியோகத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொதுப்பணித்துறை செயலர் க.மணி வாசன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:

காவிரி துணைப்படுகை யில் நீர்ப்பாசன விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப் படுத்துதல் திட்டத்துக்காக நபார்டு கட்டமைப்பு வளர்ச்சி உதவி அமைப்பிடம் (என்ஐடிஏ) ரூ.3,384 கோடி நிதியுதவியை பெறுவதற்கு தமிழ்நாடு நீர்வளபாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகம் ஒப்புதல் வழங்கியது.

மேலும், திட்டத்துக்கான நிதியுதவி குறித்த நபார்டின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணிகளை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து,காவிரி துணை படுகையில் 33 தொகுப்பு களுக்கு நிதி கோரி நபார்டுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதில், இரண்டு தொகுப்புகளுக்கு மட்டும் ரூ.224 கோடியே 80 லட்சத்தை தமிழக அரசு தன் பங்காக ஒதுக்கியது. அதன்பின், நபார்டு சார்பில் ரூ.2,978 கோடி இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மண்டல நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக அரசு 31 தொகுப்புகளுக்கு ரூ.3,159 கோடியே 30 லட்சத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், காவிரி ஆற்றின் மேல் பகுதி யில் அதிகளவில் மணல் சேர்ந்துள்ளதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் இருந்து உபகால்வாய்களுக்கு வழங்கப்படும் நீரை வழங்க இயலவில்லை. காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, காவிரி டெல்டா பகுதிகளுக்கும் புதுச்சேரி மாநில பகுதிக்கும் உரிய அளவு நீர் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், காவிரி ஆற்றின் மேல் பகுதிகளில் இதற்கான கட்டுமானங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குறுவை பயிர்களுக்காக வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை யில் இருந்தும் அதைத்தொடர்ந்து ஜூன் 16-ம் தேதி கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக பணிகளை முடிக்கும் வகையில், திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, 31 தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3,159 கோடியே 30 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்

இதனிடையே முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள், பல புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசின் சார்பில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

தேர்தலை ஒட்டி தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் சில முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன், ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதியும் ஒதுக் கப்படும்.

இதுதவிர, முதல்வர் கடந்த பிப்.5-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்த, 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத் துக்கு, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய இழப்புத் தொகையை வழங்குவதற்கான நிதி ஆதாரம் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட உள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பின் படி, அது தொடர்பான விவ ரங்களும் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் சேர்க் கப்பட உள்ளன.

இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட் டத்துக்கு முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில், துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உட்பட பல் வேறு துறைகளின் செயலர்கள் பங் கேற்றனர்.

காலை 11.50 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கை, பயிர்க்கடன் தள்ளுபடி, 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் ஆகியவற்றுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.63 ஆயிரம் கோடி முதலீடு

அண்மையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் ரூ.63 ஆயிரம் கோடி அளவுக்கான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நேற்றும் பல நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் நிலையில், நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதில் விவாதிக்கப்படும் பல்வேறு விவரங்கள் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டு தமிழகத்தின் கோரிக்கைகளாக வைக்கப் படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x