

சிதம்பரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி திமுக சார்பில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு கூட்டத் தில் பங்கேற்ற மக்களிடம் மனுக்களைப் பெற்றார். மனுக்களை வழங்கியவர்களில் சிலரை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசச்சொன்னார். அவர்களிடையே பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்” என்று உறுதியளித்தார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவி கள் மற்றும் சமூக ஆர்வலர்களைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து இக்கூட்டதில் ஸ்டாலின் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் உள்ளகடலூர் சிதம்பரம், புவனகிரி,குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதி மக்களை சந்தித்து அவர் களின் குறைகளை மனுவாக பெற வந்துள்ளேன். இது மாநாடு போல் எழுச்சியாக உள்ளது. கட லூர் மாவட்டத்தை திமுக கழக மாவட்டமாக மாற்றியுள்ளார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
அதிமுக ஆட்சியில் பேக்கேஜ் டெண்டர் நடக்கிறது. உள்ளாட்சி துறை இல்லை, ஊழல் ஆட்சி துறை.அந்த துறையின் அமைச்சர் வேலுமணி சிறைக்குச் செல்வது நிச் சயம்.
கடலுார் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணப்படும். இதற்காக வல்லுநர்களிடம் பேசி வருகிறேன். பச்சை துண்டு போட்டுக்கொண்டு நானும் விவசாயி எனமுதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு துரோ கம் செய்து வருகிறார்.
‘மக்களுக்காக இரு, மக்களுடன் இரு’ என்ற அண்ணாவின் வார்த் தைக்கு ஏற்ப பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம்.
ஊழல் நிர்வாகம், திறமை யின்மை மற்றும் அகங்காரம் ஆகியமூன்றும் சேர்ந்ததுதான் பழனிசாமி யின் ஆட்சி. திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது பெற்ற திட்டங்களை பெரிய பட்டியலே போடலாம்.
குறிப்பாக மத்திய அரசின் மொத்த திட்டத்தில் 11 சதவீதத்தை தமிழகத்திற்கு பெற்றுள் ளோம். குறிப்பாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, ரூ.1,553 கோடியில் சேலம் உருக்காலையை மேம்படுத்தியது, ரூ.1,650 கோடியில் மதுர வாயல் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 69 திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
இந்த மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை அமைச்சராக உள்ள சம்பத் கடலுார் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் எந்த பெரிய தொழில் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அவர் தொகுதியி லேயே பிரச்சாரத்தின்போது விரட் டியுள்ளனர்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் முதல்வர் பழனிசாமி எதையும் கோட்டு பெறவில்லை. எதை கேட்டு பெற்றுள்ளார்? எய்ம்ஸ்மருத்துவமனை என்று சொல்கி றார்கள். இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்த வைக்கவில்லை. நமக்கு தரவேண்டிய நிதியை கூட கேட்டு பெற முடியாத அரசாக உள்ளது அதிமுக அரசு. இங்கு கொடுக்கப்படும் கோரிக்கைகளை இரவோடு இரவாக அவர்கள் நிறை வேற்றி வருகின்றனர் என்றார்.
கூட்டத்தில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சரவணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விருத்தாசலத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வெ.கணேசன் நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.