சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் சாதனை படைக்கும் என்எல்சி- கடந்த 3 மாதங்களில் 45 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் உற்பத்தி

சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் சாதனை படைக்கும் என்எல்சி- கடந்த 3 மாதங்களில் 45 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் உற்பத்தி
Updated on
2 min read

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா அனல் மின் நிலைய நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தி வருகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டிற்கான (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் கடந்த பிப். 10-ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனத்தின் மின்நிலையங்கள், பரிசோதனை முறையில் மேற்கொண்ட மின் சக்தியையும் சேர்த்து மொத்தம், முறையே 425 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மற்றும் 1,374 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன.

நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உருவான உற்பத்தி இழப்பு மற்றும் முதல் அனல் மின் நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி பிரிவுகளும் 30.09.2020 அன்றுடன் உற்பத்தியை நிறுத்தியது போன்ற காரணங்களால் மின்சக்தி உற்பத்தியானது கடந்த ஆண்டைவிட சற்றுக் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவில் சில மாதங்களும், 709 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்

நிலையங்களில் ஒன்பது மாதங்கள் முழுவதும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதால் இந்த உற்பத்தி குறைவு ஓரளவு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனத்தின் சூரியஒளி மின் நிலையங்கள் முறையே, 45 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மற்றும் 144 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளன.

மின் சக்தி ஏற்றுமதியைப் பொறுத்த வரையில், நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் பரிசோதனை முறையில் மேற்கொண்ட மின் சக்தியையும் சேர்த்து மொத்தம், முறையே, 366 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மற்றும் 1185 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் முறையே ரூ. 1,875 கோடியே 13 லட்சம் மற்றும் ரூ. 6,110 கோடியே 99 லட்சத்தையும், இந்நிறுவனம், மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் (2019-20) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் பெற்ற மொத்த வருவாயானது முறையே, ரூ.2, 436 கோடியே 75 லட்சம் மற்றும் ரூ.6,558 கோடியே 63 லட்சமும் ஆகும்.

நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனம் முறையே, ரூ.74 கோடியே 6 லட்சம் மற்றும் ரூ.386 கோடியே 99 லட்சத்தையும் நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

முந்தைய ஆண்டின் (2019-20) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் பெற்ற நிகர லாபமானது முறையே, ரூ.361 கோடியே 55 லட்சம் மற்றும் ரூ.1021 கோடியே 37 லட்சம் ஆகும்.

துணை நிறுவனங்களுடன் சேர்த்து இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயானது, நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.2623 கோடியே 29 லட்சம் மற்றும் ரூ.8197 கோடியே 94 லட்சம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே கால அளவுகளில் இந்த பிரிவில் ஈட்டிய தொகையானது ரூ.3093 கோடியே 18 லட்சம் மற்றும் ரூ.8187 கோடியே 56 லட்சமும் ஆகும்.

நடப்பு நிதியாண்டின் (2020-21) மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களில், இந்நிறுவனம் அதன் துணை நிறுவனங்களுடன் சேர்த்து முறையே, ரூ.183 கோடியே 13 லட்சம் மற்றும் ரூ.588 கோடியே 61 லட்சத்தையும் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில், இந்த வகையில் ஈட்டிய தொகை யானது முறையே ரூ.400 கோடியே 15 லட்சம் மற்றும் ரூ.954 கோடியே 86 லட்சமும் ஆகும்.

நெய்வேலி புதிய அனல் மின்நிலையத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது மின் உற்பத்தி பிரிவு, கடந்த 3-ம் தேதியன்று வர்த்தக ரீதியாக மின் சக்தி விற்பனை செய்ய தகுதிபெறும் பொருட்டு நடத்தப்பட்ட 72 மணிநேர முழு உற்பத்தி பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் தனது மின்சக்தியை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in