Last Updated : 14 Feb, 2021 03:18 AM

 

Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

கடலூரிலும் ஒரு திருக்குறள் சேவை

கடலூர் மத்திய நூலகத்தின் சுற்றுச்சுவரில் திருக்குறள்களை எழுதிய ‘உலக திருக்குறள் பேரவை’ அமைப்பினர்.

திருக்குறளின் உன்னத கருத்துகளை நாம் வாழும் இச்சமூகத்திற்கு பரப்பி விட வேண்டும் என்று சேவையாற்றுவோர் ஊருக்கு ஊர் உண்டு.

அதில், ஒன்று கடலூரில் இயங்கி வருகிறது. ‘உலக திருக்குறள் பேரவை’.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபயிற்சி மேற்கொண்டால் திரும்பிய இடமெல்லாம் இவர்கள் எழுதி வைத்த தெளிவுரையுடன் கூடிய திருக்குறள் பளிச்சிடும்.

கடந்த 2014ம் ஆண்டு குன்றக்குடி அடிகளார் தலைமையில் கடலூரில் தொடங்கப்பட்டது உலக திருக்குறள் பேரவை’. இந்தப் பேரவையின் தலைவராக பாஸ்கரன், செயலாளராக அருள்ஜோதி செயல்பட்டு வருகின்றனர். இப்பேரவையில் 52 உறுப்பினர்கள் பங்கேற்று திருக்குறளின் நற்கருத்துகளை பரப்பும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் சார்ந்த போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவது, அரசு பள்ளிச் சுவர்கள், நூலகங்கள் உள்ளிட்ட இடங்கயில் தெளிவுரையுடன் கூடிய திருக்குறள்களை எழுதுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவ, மாணிவிகளுக்கு வீட்டில் ஒட்டுவதற்கு 14 ஆயிரம் திருக்குறள் ஸ்டிக்கர்களை வழங்கியிருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் திருக்குறள் தெளிவுரையுடன் திருக்குறள் 12 ஆயிரம் புத்தகங்களை வழங்கியிருக்கின்றனர்.

மேலும், திருவள்ளுவர் தினமான கடந்த 16-ம் தேதி 3,200 மாணவர்களுக்கும் இதை வழங்கியிருக்கின்றனர்.

இப்படி உல பொதுமறையை நம் கடலூரில் பரப்பும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர் ‘உலக திருக்குறள் பேரவை’ அமைப்பினர்.

“நாம் அனைவரும் நல் வளம் பெற திருக்குறளில் இருக்கும் வாழ்வியல் கருத்துகள் ஒன்றே போதுமானது. அதனாலேயே அந்த அரிய கருத்துகள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுவே எங்கள் இலக்கு” என்கிறார் பேரவையின் தலைவர் பாஸ்கரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x