

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் புற்றீசல் போல முளைக்கும் புதுக் கட்சிகளுக்கு குறைவிருக்காது.
இந்த நிலையில் யாதவ சமுதாயத்தினர் அதிகம் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் கோகுல மக்கள் கட்சி, தங்களுக்கு16சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விருத்தாசலத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றின் முதல் சுதந்திர போராளியான மாவீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்,செஞ்சிக் கோட்டையை உருவாக்கி, அப்பகுதியில் அரசாண்ட யாதவ குல மன்னர்களான ஆனந்தக் கோன், கிருஷ்ண கோன், கோனேரி கோன் போன்றவர்கள் தான் என்பதை வரலாற்று குறிப்புகளுடன் தெளிவுபடுத்தி, செஞ்சிக் கோட்டையை ‘ஆனந்த கோன் கோட்டை’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.யாதவ வம்ச அரசர்களுக்கு அவ்விடத்தில் மணிமண்டபம் அமைத்து அவர்களின் திருவுருவ சிலை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழாவில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் வந்து மாலை செலுத்தி மரியாதை செய்யாததற்கு வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.