மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு
Updated on
1 min read

கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

கனமழை காரணமாக குறிப்பிட்ட சில பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் (இளநிலை மற்றும் முதுநிலை) ஒத்திவைக்கப்பட்டன. பழைய தேர்வு தேதி மற்றும் மறுதேதி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

நவம்பர் 12 (வியாழன்) தேர்வுகள் - டிசம்பர் 21 (திங்கள்)

நவம்பர் 13 (வெள்ளி) தேர்வுகள் - டிசம்பர் 22 (செவ்வாய்)

நவம்பர் 14 (சனி) தேர்வுகள் - டிசம்பர் 24 (வியாழன்)

நவம்பர் 16 (திங்கள்) தேர்வுகள் - டிசம்பர் 28 (திங்கள்)

நவம்பர் 17 (செவ்வாய்) தேர்வுகள் - டிசம்பர் 29 (செவ்வாய்)

நவம்பர் 18 (புதன்) தேர்வுகள் - டிசம்பர் 30 (புதன்)

நவம்பர் 19 (வியாழன்) தேர்வுகள் - டிசம்பர் 31 (வியாழன்)

நவம்பர் 20 (வெள்ளி) தேர்வுகள் - ஜனவரி 2 (சனி)

நவம்பர் 21 (சனி) தேர்வுகள் - ஜனவரி 4 (திங்கள்)

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in