Last Updated : 14 Feb, 2021 03:19 AM

 

Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

மார்ச் 2-வது வாரத்தில் இலந்தகரையில் அகழாய்வு- மத்தியத் தொல்லியல்துறையுடன் கைகோர்க்கும் அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே இலந்தகரையில் மார்ச் 2-வது வாரத்தில் அகழாய்வுப் பணி தொடங்குகிறது. இந்த அகழாய்வுப் பணியில் மத்தியத் தொல்லியல்துறையுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கைகோர்க்கிறது.

காளையார்கோவில் அருகே இலந்த கரைப் பகுதியில் 10 ஏக்கரில் பானை ஓடுகள், பவளப் பாசிகள், கல் பாசிகள், கண்ணாடி பாசிகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்தப் பகுதிக்கு அருகிலேயே கல்வட்டம், நடுகல், முதுமக்கள் தாழிகள் போன்றவையும் காணப்படுகின்றன. இலந்தகரை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, கல், கண்ணாடி பாசிகள் செய்யும் மிகப்பெரிய தொழில் தளமாக இருந்திருக்கலாம எனக் கூறப் படுகிறது.

மேலும் இலந்தகரையில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளி, முத்திரை நாணயம், ஆயிரம் ஆண் டுகளுக்கு முந்தைய சோழர் கால நாணயம் கிடைத்துள்ளன. இலந் தகரையை சுற்றியுள்ள நல்லேந்தல், புரசடைஉடைப்பு, வேளாங்குளம், கருங்காலி உள்ளிட்ட பகுதிகளில் கல்வட்டம், நடுகல் போன்றவை காணப் படுகின்றன. இதுதவிர இப்பகுதியில் கல்வெட்டுகள், சூலக்கற்கள், கழு மரங்கள், இடிந்தநிலையில் உள்ள கோயில்கள் ஏராளமாகக் காணப்படு கின்றன.

இந்த பகுதியில் உள்ள கல்வெட்டுகள், நில அமைப்பில் உள்ள மாற்றங்கள், கோயில் இடிபாடுகளை வைத்து பார்க்கும்போது, 10-ம் நூற்றாண்டு வரை இப்பகுதி சிறப்பாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது என தொல் லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர். மேலும் இப்பகுதியை ஆய்வு செய்த இலந்தகரையைச் சேர்ந்த தொல் லியல் ஆர்வலர் ரமேஷ் என்பவர் பெரிய அளவில் அகழாய்வு நடத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து இப்பகுதியில் அக ழாய்வு நடந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் கிடைத்தநிலையில் மார்ச் 2-வது வாரத்தில் அகழாய்வு நடக்க உள்ளது. இதையடுத்து தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் தான் சேகரித்த தொல்பொருட்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரனிடம் வழங் கினார். மேலும் இந்த அகழாய்வு வரலாற்று பேராசிரியர்கள் ராஜவேலு, சரவணகுமார் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. மத்திய தொல்லியல்துறையில் இருந்து ஒரு தொல்லியல் ஆய்வாளரும் நியமிக் கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் பல்கலைக்கழகத்துடன் மத்திய தொல்லியல்துறை இணைந்து அகழாய்வு நடத்துவது இதுவே முதல் முறை. இந்த அகழாய்வுக்கு தமிழக தொல்லியல்துறையும் தேவையான உத விகளைச் செய்துள்ளது.

தமிழக வரலாற்றில் கீழடிக்கு இணையாக இலந்தகரை அகழாய்வு இருக்கும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x