Published : 30 Nov 2015 08:42 AM
Last Updated : 30 Nov 2015 08:42 AM

புதுச்சேரியில் புயல், மழை பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு: அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரி புகார்

புதுச்சேரியில் மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேற்று ஆய்வு செய்தது. அப்போது, புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது விவசாயிகள் சராமரியாக புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் பலத்த மழையில் 382 வீடுகள் சேதமடைந்தன. 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. எனவே, புதுச் சேரிக்கு நிவாரணத் தொகையாக ரூ.182.45 கோடி வழங்கவும் மத்தியக் குழுவை அனுப்பவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதினார். இதை யடுத்து, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு வந்தது. நேற்று காலையில் புதுச்சேரி ஆட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மத்தியக் குழு வினர் ஆலோசனை நடத்தினர்.

பின்பு, பாகூர் தாலுகாவில் உள்ள கீழ்பரிக்கல்பட்டில் மழையில் பாதித்த பயிர்கள், கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணையாறு மீதுள்ள தரைப்பாலம் ஆகிய வற்றை பார்வையிட்டனர். கொமந்தான்மேடு பகுதியில் மழை யால் அழுகிக் கிடந்த மரவள்ளி கிழங்குகளை மத்தியக் குழுவினரி டம் விவசாயிகள் காண்பித்து நிவாரணம் வழங்குமாறு கூறினர். கல்வி அமைச்சர் தியாகராஜனும் குழுவினரிடம், பாகூர் தாலுகாவில் 200 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளதாக தெரிவித் தார். பிறகு, அரங்கனூரில் மழை நீர் தேங்கி நின்ற நெல் வயல்களை அந்தக் குழு பார்வையிட்டது. கரிக்கலாம்பாக்கத்தில் மழையில் சேதமான வெண்டை, கத்தரி, கரும்பு, நெல் பயிர்களை மத்தியக் குழு பார்வையிட்டபோது, அழுகிய காய்கறிகளை சாலையில் விவசாயிகள் கொட்டி வேதனையு டன் குறைகளைத் தெரிவித்தனர்.

கோர்க்காடு கிராமத்தில் மீனாட்சி, கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகிய விவசாயிகள் வந்து 45 நாளே ஆன அழுகிய நெல்பயிரை காண்பித்து, “சேதமடைந்த நிலங்களை புதுச்சேரி அரசு அதிகாரி கள் பார்வையிட வரவில்லை. வடிகால்களைத் தூர்வாரவில்லை. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை வெள்ள சேதம் தொடர்பாக அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சரமாரியாக புகார் தெரி வித்தனர்.

பின்னர், சேந்தநத்தம், உள வாய்க்கால் கிராமங்களில் வெற் றிலை, பூச்செடிகள், காய்கறி பயிர் களை குழுவினர் பார்த்தனர். அதன் பிறகு, குழுவின் தலைவர் பிரசாத் கூறும்போது, “தொடர் மழை யால் புதுச்சேரியில் பயிர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. சேதம் குறித்து முறையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x