Published : 13 Nov 2015 11:57 AM
Last Updated : 13 Nov 2015 11:57 AM

விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கி அழியும் கடல் விசிறிகள்

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் கடல் பசு, டால்பின், திமிங்கலம், கடல் குதிரைகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள், கடல் அட்டை கள் உட்பட 3,600-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகள் மனித மூளை, மான் கொம்பு, மேஜை, தட்டு ஆகிய வடிவங்களிலும் காணப்படுகின்றன. மிருதுவான பவளப் பாறை வகைகளில் கடல் விசிறி அடங்கும். 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இதன் விலங்கியல் பெயர் கார் கோனியன். அவை வசிக்கும் இடத்துக்கு ஏற்ப கடல் விசிறிக ளின் நிறங்கள் மாறு படும். விசிறி போன்று தோற்ற மளிக்கும் இதன் ஒவ்வொரு கிளை யும் ஆயிரக்கணக்கான பாலிப் பூச்சிகளால் ஆனவை. மேலும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப் புகள் இரண்டும் உடைய அரிய வகை கடல்வாழ் உயிரினம் இது.

இவற்றில் இருந்து கருவுறுதல் நடைபெற்று லார்வாக்கள் உரு வாகின்றன. இந்த லார்வாக்கள் பாறை அல்லது மணலை ஆழ மாகப் பற்றி கிளைகளை விரித்து புதிய கடல் விசிறி உருவாகி றது. தற்போது கடல் விசிறியில் இருந்து மருந்துகள் தயாரிப்ப தற்கான ஆராய்ச்சிகளும் நடை பெறுகின்றன.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் விசிறிகளை எடுப் பதற்கு தடை உள்ளது. ஆனால், விசைப்படகு மீனவர்கள் பயன் படுத்தும் வலைகளில் கடல் விசிறிகள் சிக்கிவிடுகின்றன. இதனால் கரைக்கு வந்ததும் வலை யில் சிக்கிய கடல் விசிறிகளை மீன வர்கள் தூக்கி எறிந்து விடுகின்றனர். வலைகளில் கடல் விசிறிகள் சிக்கினால் உடனே கடலிலேயே விட்டுவிடுமாறு மீனவர்களிடம் வலி யுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x