Published : 12 Feb 2021 08:13 PM
Last Updated : 12 Feb 2021 08:13 PM

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமானங்களை இயக்கும் திட்டம்  தற்போதைக்கு இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை விமான நிலைய இயக்கம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய விமான அமைச்சகம், மதுரை விமான நிலையம் ஒரு சுங்க விமான நிலையம். எந்தவொரு விமான நிலையத்தையும் “சர்வதேச விமான நிலையம்” என்று அறிவிக்க வேண்டும் என்றால் அது இந்திய அரசாங்கம் தான் முடிவெடுக்க வேண்டும்.

தற்போது 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்குவது இல்லை. 24 மணிநேரமும் விமானங்களை இயக்குவது விமான இயக்ககம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் நிர்வாக ஒப்புதலைப் பொறுத்து இருக்கும்.

இப்போதைக்கு 24 மணி நேரமும் விமானங்களை இயக்கும் திட்டம் ஏதும் இல்லை.

24 மணி நேரமும் விமானங்களை இயக்குவதில் செயல்பாட்டு சிரமம் என்னவென்றால், கூடுதல் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் . தற்போது 2 ஷிப்ட் செயல்பாடு காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

புதிய வழிதடத்திலோ அல்லது புதிய விமான சேவையோ இயக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

மதுரையில் இருந்து சென்னைக்கு 5 முறை டெல்லி மற்றும் பெங்களூரு தலா 2 முறை ஹைதராபாத் மற்றும் மும்பை தலா ஒரு முறையும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்படுகிறது.

துபாய்க்கு வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர், துபாய், அபுதாபி போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x