

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் கடந்த 22.2.2015 அன்று நடத்தப்பட்டது. தேர்வின் வினாக்களுக்கான இறுதி விடைகளும், தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களும் வனத் துறையின் இணையதளத்தில் (www.forests.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.