பிரதமர், ஆளுநர், முதல்வர் அலுவலக முத்திரைகளை போலியாக உருவாக்கி ரூ.100 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது: துணைவேந்தர் பதவி, அரசு டெண்டர் வாங்கித் தருவதாக ஏமாற்றியது அம்பலம்

கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஓம் மற்றும் மகாதேவய்யா
கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஓம் மற்றும் மகாதேவய்யா
Updated on
2 min read

பிரதமர், ஆளுநர், முதல்வர் அலுவலக முத்திரை போல போலியாக உருவாக்கி, எம்.பி., எம்எல்ஏ சீட், துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி செய்த 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 2018-ல் கிண்டி ராஜ்பவ னில் உள்ள ஆளுநர் மாளிகை அலுவலகத் துக்கு நேரில் வந்து, ‘‘அண்ணாமலை பல்கலைக்கழக் துணைவேந்தராக என்னை நியமித்து நியமன ஆணை வந் துள்ளது. எப்போது நியமனம் செய்யப் போகிறீர்கள்’’ என்று கேட்டு, தனக்கு இ-மெயிலில் வந்த நியமன ஆணையையும் காட்டியுள்ளார்.

அந்த மெயிலை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது, அச்சு அசலாக ஆளுநர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் என்பது தெரியவந்தது.

மகாதேவய்யா என்பவர் ஆளுநருக்கு நெருக்கமானவர் என்று கூறி செந்தில் குமாரை நம்பவைத்து, ரூ.1.50 கோடி வாங் கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை அலுவலக அதிகாரிகள் உடனடி யாக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். டிஜிபி உத்தரவின்பேரில், இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யாவை (54) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே், வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர் தனக்கு எம்.பி. சீட் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் ரூ.1.50 கோடி வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், ஜாமீனில் வெளியே வந்துள்ள மகாதேவய்யாதான் ஜெபா ஜோன்ஸ்யையும் ஏமாற்றி உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

அவரைப் பிடிக்க உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மைசூரில் அவர் தலை மறைவாக இருப்பதை அறிந்த சிபிசிஐடி தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று, மகாதேவய்யா, அவரது மகன் அங்கித் (29), இவர்களது நண்பரான ஒசூரைச் சேர்ந்த ஓம் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரதமர், பல மாநில ஆளுநர்கள், முதல் வர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பதுபோல காட்டிக்கொண்டு மூவரும் இணைந்து பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளனர். எம்.பி., எம்எல்ஏ சீட், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாகவும், சாலை, மேம்பாலம் போன்ற டெண்டர்களை அரசுகளிடம் இருந்து நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி உள்ளனர்.

இதுபோல, ஒவ்வொருவரிடம் இருந் தும் ரூ.1.50 கோடி முதல் ரூ.10 கோடி வரை அபகரித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதேபோல, நாடு முழுவதும் பல்வேறு தொழிலதிபர்கள், பணக்காரர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகம், பல்வேறு மாநிலங் களின் ஆளுநர், முதல்வர் அலுவலக முத்திரைகளை போலியாக உருவாக் கியும், அதிகாரிகள் போல கையெழுத் திட்டும் போலி நியமன ஆணைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர் மகா தேவய்யாவின் மகன் அங்கித். அந்த போலி ஆணைகளை மெயில் மூலம் அனுப்பி பலரை ஏமாற்றி உள்ளனர். இவர்களது நண்பரான ஓசூரை சேர்ந்த ஓம் என்பவர் இதில் இடைத் தரகராக செயல்பட்டுள்ளார்.

ரூ.250 கோடிக்கு மேல் சொத்து

மோசடிக்கு தேவையான உப கரணங்களை பெங்களூருவில் வாங்கி, போலி சான்றிதழ்களை உருவாக்கி உள்ளனர். பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் மகாதேவய்யா கடந்த 3 ஆண்டுகளில் 3 வீடுகள் வாங்கியுள்ளார். அவரது மகன் அங்கித் 3 வீடுகளும், பல இடங்களில் சொத்துகளும் வாங்கியுள்ளார். இவர்கள் ரூ.250 கோடிக்கு மேல் சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in