Published : 19 Jun 2014 09:30 AM
Last Updated : 19 Jun 2014 09:30 AM

இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு: காதல் தகராறில் பயங்கரம் - மத்திய ரிசர்வ் படை காவலர் உள்ளிட்ட இருவர் கைது

ராணிப்பேட்டை அருகே காதல் தகராறில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் அடுத்த பரதராமியைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவர் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மேல்காட்டுப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற் பட்டுள்ளது. இருவரும் காதலித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உறவினர் லட்சுமிபதியின் செல்போனில் இருந்து தினேஷின் செல்போனுக்கு அந்த இளம்பெண் பேசியுள்ளார். 15 நாட்களுக்கு முன்பு லட்சுமிபதியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தினேஷ், திவ்யாவிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், திவ்யாவிடம் இனி பேசக்கூடாது என லட்சுமிபதி தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்ப்பையும் மீறி பேசுவேன் என தினேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மீண்டும் லட்சுமிபதியின் செல் போனில் தினேஷ் தொடர்பு கொண் டுள்ளார். அப்போது, ஆபாசமான வார்த்தைகளால் தினேஷை திட்டி யுள்ளார் லட்சுமிபதி. இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ், தனது நண்பர்கள் 4 பேருடன் செவ் வாய்க்கிழமை இரவு 10 மணியள வில் மேல்காட்டுப்புதூர் கிராமத் துக்கு லட்சுமிபதியின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அங்கிருந்த லட்சுமிபதியின் தாய் பட்டம்மாள் (40) என்பவரை தாக்கி யுள்ளனர். பின்னர், அங்கு வந்த லட்சுமிபதியையும் தாக்கியுள்ள னர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தினேஷூடன் வந்தவர்களை சுற்றிவளைத்தனர்.

3 ரவுண்டு துப்பாக்கிச்சூடு

அப்போது, தினேஷூடன் வந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு மிரட்டியுள்ளார். தப்பிச் செல்ல முயன்ற அவர்களைப் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். அவர்கள் நோக்கி அந்த நபர் மீண்டும் ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மூன்றாவது முறை சுட்ட போது, லட்சுமிபதியின் சகோதரர் ரேணுகோபால் (23) என்பவரது கால் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில், அவர் சுருண்டு கீழே விழுந் தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. குண்டு காயத்துடன் மீட் கப்பட்ட ரேணுகோபால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவக் குழு வினர் அறுவைச் சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டை பத்திரமாக அகற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பிய கும்பலை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் (ராணிப்பேட்டை), விஜயகுமார் (குடியாத்தம்) ஆகியோர் மேற் பார்வையில் தனிப்படை அமைக் கப்பட்டது. பரதராமி பகுதியில் பதுங்கியிருந்த தினேஷின் நண்பர் கள் இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந் திர மாநிலம் சித்தூர் அடுத்த தேன் பெண்டா கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (27), பூதலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என தெரியவந்தது.

7.62 மி.மீ ரக கைத் துப்பாக்கி

இதில், விநாயகம் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை காவலராக உள்ளார். 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். தினேஷின் உறவினரான இவர், உத்தர பிரதேச மாநிலத்தில் ஏஜெண்ட் ஒருவர் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த துப்பாக்கியை வாங்கி வந்ததாக தெரிவித்தார். ஆனால், அந்த துப்பாக்கி பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் 7.62 மி.மீ ரக துப்பாக்கி என விசாரணையில் தெரியவந்தது.

எனவே, இந்த துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் தனது படைப்பிரிவில் இருந்து திருடிவந்தாரா? என தெரியவில்லை. இந்த துப்பாக்கியின் எண் மற்றும் அதன் புகைப்படத்தை விநாயகத்தின் படைப் பிரிவுக்கு வேலூர் மாவட்ட போலீஸார் இ-மெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். விநாயகத்திடம் காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் விசாரணை நடத்திவருகிறார். மேலும், தலைமறைவாக உள்ள தினேஷ் உள்ளிட்ட இருவரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x