

கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, தை அமாவாசையையொட்டி புனித நீராட தடை விதிக்கப்பட்டதால், திருவையாறு காவிரிக் கரையான புஷ்ப மண்டப படித்துறை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டப படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்து டன் வந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, ஐயாறப்பரை வழி பட்டுச் செல்வது வழக்கம்.
நிகழாண்டு, கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, திருவையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் நீராட, தர்ப்பணம் கொடுக்க அதிகாரிகள் தடைவிதித்து உத்தர விட்டனர். இதையடுத்து, தை அமாவாசையான நேற்று பொதுமக்கள் யாரும் வராததால், காவிரி புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.
உதய கருட சேவை
தை அமாவாசையை முன் னிட்டு, கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெரு மாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலின் நந்திபுஷ்கர திருக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முன்னோருக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் காவிரி ஆற்றின் டபீர் படித்துறையில் நேற்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால், போலீ ஸார் வரவழைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பத்து, பத்து நபர்களாக செல்ல அனுமதிக் கப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர்.
காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாண பெருமாள், பட்டினச்சேரி கடற்கரையில் திரு மலைராயன்பட்டினம் வீழிவரதராஜ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ் வுகளில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள நெரூர் மற்றும் குளித்தலை கடம்பர் கோயில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நேற்று தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.