வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே வெள்ளத்தில் சிக்கிய இருவர் உயிருடன் மீட்கப் பட்டனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு வட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில், தனியார் குடியிருப்பில் காவலராக பணியாற்றும் கள்ளக்குறிச் சியைச் சேர்ந்த சித்திரசேரன் அவரது மகன் ரவி ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வந்த பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்ததால் அவர்களால் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீனவர்கள் ஆகியோரைக் கொண்ட 70 பேர் குழு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 10 மணி வரை சுமார் 16 மணி நேரம் போராடி இருவரையும் உயிருடன் மீட்டனர் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in