மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர்: மக்களின் ஒற்றை நம்பிக்கையாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர்: மக்களின் ஒற்றை நம்பிக்கையாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகளை கேட்கும் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி 71 தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளேன். மக்களின் மனுக்கள் மீதுவிரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் 100 நாட்களில் தீர்வு காணப்படும். மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை அடிப்படை கோரிக்கைகளே. அவற்றைக்கூட 10 ஆண்டுகாலஅதிமுக அரசு நிறைவேற்றவில்லை. அடுத்து வரும் திமுக ஆட்சி நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் வெளிப்பட்டது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பாரா முகத்துடன் இருந்து வருவதால் மக்களின் நம்பிக்கைக்குரியதாக திமுக இருக்கிறது. அவற்றில், ஆவன செய்யக் கூடியவற்றை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே செயல்படுத்த முயற்சிக்கிறோம்.

பெருந்துயரத்தில்..

அதிமுகவின் மோசடிகள்அனைத்தையும் பொதுமக்கள்வேதனையுடன் எடுத்துரைக்கிறார் கள். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கதர் துறைக்குப் பொறுப்பு வகித்தும், அங்கு கதர், கிராம கைத்தொழில் செய்வோர் பெருந்துயரத்தில் இருப்பதை புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார்கள். ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விரிவாக்கத்தை கிருஷ்ணகிரி மக்கள் எடுத்துரைத்தனர்.

ஆயிரமாயிரம் பிரச்சினைகள், லட்சக்கணக்கான கோரிக்கைகள் இவற்றை முன்வைத்த கோடிக் கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக திமுக இருக்கிறது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற திமுகவினர் மேலும் கடுமையாக, கவனமாக உழைக்க வேண்டும். ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.

இரண்டு கட்டப் பயணங்கள் நிறைவுற்ற நிலையில் 3-வது கட்டமாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணத்தை பிப்ரவரி 12-ம் தேதி (நாளை) விழுப்புரத்தில் தொடங்குகிறேன். திமுக ஆட்சியை தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in