வெள்ள நிவாரணப் பணிகள்: ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகள்; ஆச்சரியத்தில் பொதுமக்கள்

வெள்ள நிவாரணப் பணிகள்: ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகள்; ஆச்சரியத்தில் பொதுமக்கள்
Updated on
2 min read

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதில் அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் ஈடுபட்டது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கன மழையால் 16 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சென்னை மாநகர், புறநகர் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

வழக்கமாக வெள்ள பாதிப்பு களின்போது அரசும், சில சமூக, தன்னார்வ தொண்டு அமைப்பு களும் மட்டுமே நிவாரணப் பணி களில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சிகள் பெயரளவுக்கு சில இடங் களில் நிவாரண உதவிகளை வழங்குவதோடு நிறுத்திக்கொள் வார்கள். ஆனால், இந்த முறை பெரும்பாலான அரசியல் கட்சிகள் போட்டுக்கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை காண முடிந்தது.

அதிமுக

ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவு, அரிசி, போர்வை, வேட்டி, சேலை போன்ற பொருள்களை வழங்கினர். சில இடங்களில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் ஜெயலலிதா வட சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, ‘‘நான் உங்களுடன் இருக்கிறேன்; கவலைப்பட வேண்டாம்'' என ஆறுதல் கூறினார்.

திமுக

திமுக சார்பில் மழை, வெள்ளத் தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் 044-2432 0280, 78108 78108 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப் பட்டன. இதன் மூலம் ஆயிரக் கணக்கான மக்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித் துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடலூர், சென்னை யில் பல்வேறு இடங்களில் மக்களை நேரில் சந்தித்தார். திமுக சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு, அரிசி, பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், போர்வை, வேட்டி, சேலை போன்ற பொருள் கள் வழங்கப்பட்டன. திமுக மாவட்டச் செயலாளர்கள், முன் னாள் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.

தேமுதிக

மழை பாதிப்புகள் தொடங்கியது முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர், சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து வருகிறார். பல இடங்களில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மக்களிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். தேமுதிக சார்பில் அரிசி, போர்வை, வேட்டி, சேலை போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ், தமாகா

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சென்னையில் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கடலூர், சென்னையில் கடந்த ஒரு வாரமாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

பாஜக

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடலூர், சென்னையில் நிவாரணப் பொருள் களை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சென்னை மாநகர், புறநகரில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கினர். மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். பாஜக சார்பில் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சி யின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கோபால் சின்னையா ஷெட்டி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாமக, இடதுசாரிகள்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர், சென்னையில் கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கினார். பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் நிவாரண உதவி களை வழங்கி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட், இந்திய கம் யூனிஸ்ட் கட்சிகள் கடலூர், சென்னையில் நிவாரணப் பணி களில் ஈடுபட்டன. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ் ணன் சென்னையில் பல்வேறு இடங்களில் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங் கினார்.

முஸ்லிம் அமைப்புகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், இந்திய தவ்ஹீத் ஜமா அத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும் பல்வேறு இடங் களில் நிவாரண பொருள்களை வழங்கினர்.

இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும், அரசியல் கட்சிகள் நிவாரணப் பணிகளில் காட்டிய ஆர்வம் பொதுமக்களை ஆச்சரியப் படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in