திருச்சி மத்திய சிறையில் 2 ஏக்கரில் நெல் நடவுப் பணி தொடக்கம்

திருச்சி மத்திய சிறையில் 2 ஏக்கரில் நெல் நடவுப் பணி தொடக்கம்
Updated on
1 min read

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வயலில் 2 ஏக்கரில் நெல் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்தப் பணியில் சிறைவாசிகள் 16 பேர் ஈடுபட் டுள்ளனர்.

குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறைக்கு வருவோரை நல்வழிப்படுத்தும் வகையிலும், தண்டனை முடிந்து வெளியே போகும்போது எதிர்காலத்தை எதிர்கொள்ளும் விதமாகவும் சிறையில் அவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன. மேலும், மனதை நல் வழிப்படுத்த யோகா பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது.

சிறைவாசிகளைக் கொண்டு திருச்சி மத்திய சிறையில் 65 ஏக்கரில் காய்கறிகள் மற்றும் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய் யப்படுகிறது. இங்கு 20 ஏக்கரில் சுமார் 1,725 தென்னை மரங்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வரு கின்றன. மேலும், பல்வேறு வகை யான காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்யப்படுவதுடன், 3 பசுக்கள் மூலம் தினமும் சுமார் 20 லிட்டர் பால் கிடைத்து வரு கிறது. இவை அனைத்தையும் சிறைவாசிகள் பராமரித்து வருகின் றனர். இந்த வேலைகளைச் செய் யும் சிறைவாசிகளுக்கு ஊதியமும் உண்டு.

இந்த நிலையில், மத்திய சிறை யில் 1-ம் தோட்டம் என்றழைக் கப்படும் பகுதியில் சுமார் 2 ஏக்கரில் நேற்று ஆடுதுறை 39 ரக நெல் நடவுப்பணி நடைபெற்றது. சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் பணியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறிய போது, “கடந்த ஆண்டு கீரனூர் பகுதியில் இலவசமாக கிடைத்த விதை நெல்லை சுமார் 1.25 ஏக் கரில் நடவு செய்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கவில்லை. இதனால், சிறையிலேயே விதை நெல் உற்பத்தி செய்து, தற்போது 2 ஏக்கரில் நடவு செய்துள்ளோம். இந்த முறை அதிக விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க் கிறோம். இந்த நெல் நடவுப் பணியில் சிறைவாசிகள் 16 பேர் ஈடுபட்டனர்.

அதேபோல, சிறைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகள் நன்றாக வளர்ந் துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு கரும்பை வெட்ட முடிவு செய்துள் ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in