Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

கூட்டணிக்கு வராததற்கு ஸ்பெக்ட்ரம் காரணமா?- இடதுசாரிகளுக்கு ஆ,ராசா பதிலடி

ஸ்பெக்டரம் ஊழல்தான் திமுக கூட்டணிக்கு வருவதற்கு பிரச் சினை என்று இடதுசாரிகள் கருதினால், சொத்து வழக்கை எதிர்கொள்ளும் ஜெயலலிதாவுடன் மட்டும் எதன் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருச்சி தி.மு.க. மாநாடு தீர்மான விளக்கம் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

2 ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழல் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் இழப்பு என்று மத்திய கணக்காயத் துறை கூறவில்லை. தி.மு.க.வுடன் இணைவதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் 2 ஜி ஊழல் உள்ளதே என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளதே, அது மட்டும் பிரச் சினை இல்லையா? தி.மு.க. மீது மிகப்பெரிய களங்கத்தை எல்லோரும் சுமத்தி வருகின்றனர்.

சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்று 2001ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்ட ஜெயலலிதா, 2011ல் ஆட்சிக்கு வந்ததும் சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தினார்.

உரிமைக்காக போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி காலத்திலும் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து குறைகளை நிறைவேற் றினார். அ.தி.மு.க.வின் செங் கோட்டை எக்ஸ்பிரஸ் பெங்க ளூரைத் தாண்டாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x