தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் இன்று வருகை: அரசியல் கட்சி பிரதிநிதிகள், உயரதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் இன்று வருகை: அரசியல் கட்சி பிரதிநிதிகள், உயரதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு களை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அவர்கள் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் இந்திய தேர்தல் ஆணைய அறி வுறுத்தலின்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தேர்தல் துறை யினர் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரு கிறது.

முன்னதாக, கடந்த 2020 டிசம்பரில் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான தேர்தல் ஆணைய உயர்நிலைக் குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்கள் அர சியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்ததுடன், தலைமைச் செயலர், மாவட்ட தேர்தல் அதி காரிகள், பல்வேறு துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் 2 நாட்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதி காரிக்கு, பல்வேறு அறிவுறுத்தல் களை வழங்கினர். அதன்படி 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, எளிதாக வாக்களிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்துதல், 80 வயதை கடந்தவர்களுக்கு தபால் வாக்கு வசதி ஆகியவை குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரு கின்றன.

சென்னையில் ஆலோசனை

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னேற் பாடுகளை ஆய்வு செய்து தேர்தல் தேதி அறிவிப்புக்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், கூடுதல் தலைமை இயக்குநர் ஷேபாலி பி.சரண், பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் வருகின்றனர்.

அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இன்று காலை 11 மணிக்கு சென்னை வருகின்றனர். கிண்டியில் உள்ள ஓட்டலில், பகல் 12.15 முதல் 2 மணி வரை தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பிறகு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை பொறுப்பு அதிகாரியுடனும், தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுட னும் ஆலோசிக்கின்றனர்.

2-ம் நாளான நாளை, தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய வரு மான வரி, சுங்கத் துறை, அமலாக்கத் துறை, கலால், வருவாய் புலனாய்வு பிரிவு ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தமிழகத்தில் தேர்தலின் போது பணப் பட்டுவாடா நடக் காமல் தடுக்க, கண்காணிப்பு பணி களை எந்த அளவுக்கு தீவிரப் படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கு கின்றனர்.

நாளை புதுச்சேரி பயணம்

காலை 11 மணிக்கு தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி மற்றும் இதர துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திவிட்டு, பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்ற னர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை செய்துள்ளது.

தேர்தல் ஆணையக் குழு வினர் தமிழகத்தில் ஆய்வை முடித்துவிட்டு, நாளை பிற்பகல் சிறு விமானம் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு அரசியல் கட்சிகள், அதிகாரி களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, 12-ம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புகின்றனர். சென்னையில் இருந்து அன்று மாலை கேரள மாநில தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கின்றனர்.

தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணி

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஏப்ரல் 2-வது வாரம் அல்லது இறுதியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதியை இறுதி செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பெயர் சேர்க்க தற்போது 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதியை இறுதி செய்யும் விதமாக, மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in