

மகாமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணத்தில் நேற்று ஒரே நாளில் 7 கோயில்களுக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் பங்கேற் றனர்.
வரும் ஆண்டு கும்பகோணம் மகாமகப் பெருவிழா நடைபெறு கிறது. இதையொட்டி கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, திருநாகேஸ்வரம் கோயில், கும்பகோணம் சோடஷ லிங்க சுவாமிகள் கோயில், மேலக்காவிரி வரதராஜப் பெருமாள் கோயில், ஜலசந்திர மாரியம்மன் கோயில், பாட்டாச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில், இலுப்பையடி விநாயகர் கோயில், பாதாள காளியம்மன் கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற் றது. ஒரே நாளில் 7 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் கும்பகோணம் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
மகாமகக் குளத்தைச் சுற்றிலும் 16 வகையான தானங்களை வலி யுறுத்தும் வகையில் அமைந்துள் ளன பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந் தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷ பேஸ்வரர் உள்ளிட்ட 16 லிங்கங்கள் கொண்ட 16 மண்டபங்கள் சோடஷ லிங்க சுவாமிகள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு திருப்பணி மேற்கொள்ளப் பட்டு, கடந்த 27-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை16 மண்டபத்துக்கும் அடுத் தடுத்து கும்பாபிஷேகம் நடைபெற் றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு கரைகளிலும் திரண்டு கும்பா பிஷேக விழாவில் பங்கேற்றனர்.
திருநாகேஸ்வரம் கோயில்…
முற்கால சோழர்களால் கட்டப் பட்டதும், அப்பர் பெருமானால் ‘குடந்தை கீழ்கோட்டத்து கூத்த னாரே’ எனப் பாடல் பெற்றதுமான கும்பகோணம் பெரியநாயகி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிரளய காலத்தில் அமிர்த குடம் உடைந்தபோது, அதில் இருந்த வில்வம் விழுந்த இடத்தில் எழுந்தருளிய வில்வனேசரை, உலக பாரத்தை தாங்க சக்தியற்று நின்ற நாகராஜன் வணங்கி ஆசி பெற்றதால் நாகேஸ்வரர் எனப் பெயர் பெற்று, நாகதோஷ பரிகாரத் தலமாக இக்கோயில் விளங்குவதாக ஐதீகம் நிலவுகிறது.