

தமிழகத்தில் கல்வியை வியாபாரமாக்கியது திமுக என பாஜக செய்தி தொடர் பாளர் நாராயணன் திருப்பதி தெரி வித்துள்ளார்.
தி.மலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரலாற்று சிறப்பு மிக்க நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பேரழிவை சந்தித்து வந்த வேளையில் மத்திய -மாநில அரசுகள் கடுமையாக செயல்பட்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
உலக அளவில் இந்தியாவில் தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் என்ற கருத்தை பொய்யாக்கி மிக குறைந்த அளவிலான உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு சிறப்பாக கையாண் டுள்ளது. தாங்கள் மட்டும் தான் தமிழ் மீது பற்று கொண்டு இருப்பவர்கள் போலவும், தமிழர்களுக் கும் தமிழ் மொழிக்கும் பாஜக எதிரானது போல ஒரு மாயையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உருவாக்கி வருகின்றன.
அவர்களது சதி செயல் முறியடிக்கப்படும். எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தவறான தகவலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.
அவரது குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் தமிழ் கற்றுத்தரப்படுகிறதா? இதை கேட்டால், நாங்கள் வியாபாரம் செய்கிறோம் என்பார்கள். தமிழகத்தில் கல்வியை வியாபாரமாக்கிய திமுகவுக்கு, தமிழ் பற்றி பேசுவ தற்கு தகுதியில்லை. திமுக தலைவரின் மனைவி கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்கிறார். அப்போது அவர், தனது கணவருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது என்கிறார். இந்த மதத்தையும், இந்து மத தெய்வங்களை இழிவுப்படுத்தி வரும்மு.க. ஸ்டாலின், இந்துக்களி டம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.