

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதாக, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதில், அந்தந்த பகுதி பிரச்சினைகளை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். மேலும், இதில், மு.க.ஸ்டாலின் அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதுவரை, பல்வேறு மாவட்டங்களில் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின், இரண்டு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை ஸ்டாலின் வரும் 12-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவு செய்கிறார்.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (பிப். 09) வெளியிட்டுள்ள அறிவிப்பு: