

கனமழை காரணமாக தற்போது சோழவரம் ஏரியின் கரை பலவீனமாக உள்ளது. இதனால், கரை உடைவதை தவிர்க்கும் வகையில், சோழவரம் ஏரியிலி ருந்து வினாடிக்கு 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு, இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல், பூண்டி ஏரியிலிருந்து, உபரி நீர் கொசஸ் தலை ஆற்றில் திறந்து விடப் பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 25 ஆயிரம் கனஅடி கொசஸ்தலை ஆற்றில் விடப் படுகிறது.
இதற்கிடையே, பெருக் கெடுத்து ஓடும் வெள்ளத்தால் கொசஸ்தலை ஆற்றில் பெரிய பாளையம் அருகே உள்ள திருக் கண்டலம், சோழவரம் அருகே உள்ள பசுவன் பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று கரைகள் உடைந்தன.
கடலோர காவல்படை டி.ஜ.ஜி., வனிதா தலைமையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், செங் குன்றம், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர், பசுவன்பாளையத் தில் குடியிருப்பு பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டனர்.