குமரிக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குமரிக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated on
1 min read

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை மட்டுமே 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் கடலோர மாவட் டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, குமரிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன்காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களிலும், உள்மாவட் டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக் கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப் புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட் டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்து வருகிறது. சென்னையில் விட்டுவிட்டு அவ் வப்போது மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடு முறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். திரு வள்ளூர், அரியலூர், பெரம் பலூர் மாவட்டங்களில் பள்ளிக ளுக்கு மட்டும் விடுமுறை விடப் பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக் கப்பட்டுள்ளன. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். சென்னை பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in