தி.மலை தீபத் திருவிழாவுக்கு 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

தி.மலை தீபத் திருவிழாவுக்கு 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
Updated on
1 min read

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 97 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் அமைத்து, 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று திரு வண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “திரு வண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் இன்று மகா தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் மேற்பார்வையில் 4 ஐஜி-க்கள், 2 டிஐஜி-க்கள், 19 எஸ்பி-க்கள், 8 உதவி எஸ்பி-க்கள், 20 கூடு தல் எஸ்பி-க்கள், 68 டிஎஸ்பி-க் கள் உட்பட 8 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள 9 பிரதான சாலைகளில் 9 வாகன சோதனைச் சாவடிகள் மற்றும் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. 54 வாகன நிறுத்தும் இடங் கள் அமைக்கப்பட்டுள்ளன.

தி.மலை நகருக்குள் வரும் 23-ம் தேதி நள்ளிரவு முதல் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி.மலை - திண்டிவனம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந் துகள் அவலூர்பேட்டை, சேத்துப் பட்டு, வந்தவாசி, சோத்துப்பாக்கம் வழியாக செல்ல வேண்டும். அதேபோல், சென்னை செல்லும் தனியார் வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு வழியாகச் செல்ல வேண்டும்.

தனியார் வாகனங்கள் அனைத் தும் வேட்டவலம், விழுப்புரம் வழியாகச் செல்ல வேண்டும். சேலம், பெங்களூரு, செங்கம் மார்க்கத்தில் இருந்து தனியார் வாகனங்கள் செ.அகரம், காவேரி யாம்பூண்டி வழியாக அரசு கலைக் கல்லூரி வாகன நிறுத்தும் இடத்துக்கு வர வேண்டும். அங்கி ருந்து புறப்பட்டுச் செல்லும் வாகனங்கள் பெரும்பாக்கம், அத் தியந்தல் வழித் தடத்தில் செங்கம் வழியாகச் செல்ல வேண்டும்.

கற்பூரம் ஏற்றக்கூடாது

மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் கற்பூரம் விற்பனை செய்ய அனுமதி இல்லை. கிரி வலப் பாதையில் வாகனங்கள், சாமி ஊர்வலங்கள் செல்லக் கூடாது. அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படும் வாகனங்கள் 23-ம் தேதிக்கு மேல் நகரம் மற்றும் கிரிவலப் பாதைக்குள் செல்ல அனுமதி கிடையாது. தீபத்தை காண அண்ணாமலை மீது ஏறும் பக்தர்கள், மலை மீது கற்பூரம் ஏற்றக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in