

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்த 9 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், அவர் களுக்குப் பதிலாக சென்னையில் பணிபுரிந்த 9 நீதிபதிகள் மதுரை கிளைக்கும் இடமாறுதல் செய்யப் பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிய மர்த்தப்படுவது வழக்கம். கடந்த 3 மாதங்களாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.நாக முத்து, ஆர்.மாலா, எஸ்.விமலா, டி.ராஜா, ஆர்.சுப்பையா, எம்.துரைசாமி, பி.தேவதாஸ், கே.கல்யாணசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த நீதிபதிகள் வி.ராமசுப் பிரமணியன், பி.ஆர்.சிவக் குமார், எம்.வேணுகோபால், டி.ஹரிபரந்தாமன், சி.எஸ்.கர்ணன், என்.கிருபாகரன், டி.மதிவாணன், கே.ரவிச்சந்திரபாபு, எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபாகரன் முதல் அமர்வில் பொதுநல மனுக் கள், ரிட் மேல்முறையீடு மனுக் களையும், நீதிபதிகள் பி.ஆர்.சிவக் குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் 2-வது அமர்வில் ஆட்கொணர்வு, குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பர்.
இரண்டாவது அமர்வு பணி முடிந்ததும் நீதிபதி பி.ஆர்.சிவக் குமார் பழைய ரிட் மனுக்களை யும், நீதிபதி வி.எஸ்.ரவி பழைய உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி எம்.வேணுகோபால் குற்றவியல் மேல்முறையீடு, குற்றவியல் சீராய்வு மனுக்களை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு தொடர்பான மனுக்கள் விசாரிப்பார்.
நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கல்வி, தொழிற்சாலைகள், தொழிலாளர், அரசுப்பணி, கலால், சுங்கம், வனம் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு மின்வாரியம், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி, வரி, சினிமா, கூட்டுறவு தொடர் பான ரிட் மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி சி.எஸ்.கர்ணன் 2-வது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி டி.மதிவாணன் மோட் டார் வாகன இழப்பீட்டு மேல்முறை யீட்டு மனுக்களையும், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482 பிரிவு மனுக்களையும், நீதிபதி வி.எம்.வேலுமணி ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும் விசாரிப்பர்.