தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 1 லட்சம் நூல்களை பெறும் ‘நூல் கொடை’ இயக்கம் தொடங்கப்படும்: துணைவேந்தர் தகவல்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 1 லட்சம் நூல்களை பெறும் ‘நூல் கொடை’ இயக்கம் தொடங்கப்படும்: துணைவேந்தர் தகவல்
Updated on
1 min read

தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத் துக்கு பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் நூல்களைப் பெறும் ‘நூல் கொடை’ இயக்கம் தொடங் கப்படவுள்ளது என்றார் துணை வேந்தர் க.பாஸ்கரன்.

பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வித் திட்டத்தில் பயில கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. புதிதாக, சிற்பக் கலை பயிற்சிக்கூடம் தொடங்கப்படவுள்ளது. இதில் சிற்பத் துறை, கட்டிடக் கலைத் துறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கோயில் கட்டு மானங்கள், கோயில் சிலைகள் உருவாக்கம் குறித்தும் பயிற்றுவிக் கப்படும். மேலும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பல்கலைக்கழகத்துடன் மக்க ளுக்கு உணர்வுபூர்வமான நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நூலை கொடையாக அளித்து பல்கலைக்கழகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் லட்சக் கணக்கான நூல்கள், ஆய்வு மாண வர்களுக்குப் பயனுள்ளதாக இருக் கும்.

இதற்காக, ‘நூல் கொடை’ இயக்கம் தொடங்கவுள்ளோம். வீதி வீதியாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து நூல்களை கொடையாகப் பெறவுள்ளோம். அந்த நூல்களில் கொடையாளரின் பெயர் எழுதப் படும். 100 நூல்களுக்கு மேல் அளிப்பவர்களின் பெயர், நூலகப் பெயர்ப் பலகையில் குறிக்கப்படும்.

18,000 அரிய நூல்கள்

தமிழ்ப் பல்கலைக்கழக நூல கத்தில் தற்போது 1,70,327 நூல் களும், 275 காலமுறை இதழ்களும் உள்ளன. இதில் 26,787 நூல்கள் மறைந்த மற்றும் வாழும் அறிஞர் களின் வீடுகளுக்கு நேரில் சென்று பணம் கொடுத்தும், அன்பளிப்பாக வும் பெறப்பட்டவை. இதில், 18,000 அரிய நூல்களும் உள்ளன.

தொலைநிலைக் கல்வித் திட் டத்தில் நவீன காலத்துக்கு ஏற்ற கட்டிட உள் அலங்காரம், ஆபரண வடிவமைப்பு, நிகழ்ச்சி அமைப்பா ளர், தொகுப்பாளர், மருந்தில்லா அக்குபஞ்சர் மருத்துவம் போன்ற பாடத்திட்டங்கள் தொடங்கப்படும். புதிய ஆங்கில கலைச் சொற்களு டன் கூடிய அகராதிகள் கொண்டு வரப்படும். பல்கலைக்கழக பதிப்புத் துறை சார்பில் ஆண்டுக்கு தலா 10 புதிய நூல்களும், மறுபதிப்பு நூல்களும் வெளியிடப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in