Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டம் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி மற்றும் நடை பிரச்சாரம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன்

சென்னை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் இரு சக்கரவாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நடை பிரச்சார அணிவகுப்பு நடத்தினர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி ஆகியோர் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், போக்குவரத்து இணை ஆணையர்கள் லட்சுமி, பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி ஜெ.திவ்யாவுக்கு முதல் பரிசும், குருநானக் கல்லூரி மாணவி எம்.பெருமாள் தேவிக்கு இரண்டாம் பரிசு, போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த விழிப்புணர்வு வாசகம் உருவாக்கிய  முத்துகுமரசாமி கல்லூரிமாணவர் நிர்மலுக்கு முதல் பரிசும், சென்னை பல்கலைக்கழக மாணவி பவதாரணிக்குஇரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வனிதா அகர்வால் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x