Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனைகளை முதல்வர் கே.பழனிசாமி செய்துள் ளார் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜெயலலிதா பேரவை, அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில் கணினி வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் நடைபெற்றது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கணினி வழங்கிப் பேசியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனைகளை முதல்வர் கே.பழனிசாமி செய்துள்ளார். இதையெல்லாம் மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.

ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்து அதன் மூலம் மக்களின் விதியை மாற்றிக் காட்டுவார். அதுபோலத்தான் இன்றைக்கு முதல்வர் பழனிசாமி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி சாதிக்கிறார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன் மூலம் 16 லட்சத்தி 43 ஆயிரம் விவசாயிகள் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி உள்ளார்.

தேர்தல் அறிக்கையில்கூட வாக்குறுதிகள் அறிவிப்பதில் காலதாமதம் ஆகலாம். ஆனால் விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் நிறைவேற்றித் தந்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் காவலனாக முதல்வர் திகழ்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மதுரை மாவட்டக் கல்வி அதிகாரி சாமிநாதன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அன் பழகன், ராமசாமி, மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x