பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய7 பேரையும் முன்விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டு கடந்த 2018 செப்டம்பர் 9-ம்தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் ஆளுநர் தனதுகருத்தை தெரிவித்திருந்தார். அதில், 7 பேர்விடுதலையை முடிவு செய்யும் அதிகாரம்குடியரசுத் தலைவருக்கே உள்ளது என்றுதெரிவித்துள்ளார். இந்நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றுவெளியிட்ட ட்விட்டர்பதிவில், ‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் தமிழக அரசுஉறுதியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, ‘‘7 பேர்விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அளித்தபதில் அடிப்படையில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்செய்துள்ளது. ஆளுநர் அளித்த பதில்குறித்த விவரங்கள்எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in