தமிழகம் முழுவதும் கன மழையால் மின் நுகர்வு 9 கோடி யூனிட் குறைந்தது: மழை பாதிப்புகள் இருந்தபோதிலும் மின்வாரியம் நிம்மதி

தமிழகம் முழுவதும் கன மழையால் மின் நுகர்வு 9 கோடி யூனிட் குறைந்தது: மழை பாதிப்புகள் இருந்தபோதிலும் மின்வாரியம் நிம்மதி
Updated on
1 min read

தமிழகத்தில் மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டபோதிலும், மின் நுகர்வு 9 கோடி யூனிட்கள் குறைந்ததால் மின்வாரியம் சற்றே நிம்மதியடைந்துள்ளது.

தமிழகத்தில் கனமழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரிகள் நிரம்பியதால், உபரிநீர் திறந்துவிடப்பட்டு, பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.

வெள்ள பாதிப்புடன் அத்தியாவ சிய பொருட்களின் விலை உயர் வும் மக்களை அதிகள வில் பாதித்துள்ளது. கடந்த 10 நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டது. மழை நீர் வடியாத பகுதிகளில் பால் விலையும் உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக பொது மக்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்புகள் இருந்த போதிலும், மின் பற்றாக்குறை பிரச்சினை இல்லாததால் மின் வாரியம் சற்றே நிம்மதியடைந்துள்ளது. மின் நுகர்வு அதிகப்படியாக குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பயன்பாடு குறைவு

மழை காரணமாக மின்விசிறி, குளிர்சாதன இயந்திரத்தின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மின் நுகர்வும் கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 26 கோடியே 30 லட்சம் யூனிட்டாகவும், அக்டோபர் 25-ம் தேதி அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு 3 தினங்களுக்கு முன் 28 கோடியே 60 லட்சம் யூனிட்டாகவும் மின் நுகர்வு இருந்தது.

தொடர்ந்து அக்டோபர் 30-ம் தேதி 25 கோடியே 80 லட்சம் யூனிட்டாக குறைந்தது. தொடர் மழை பெய்து வருவதால், 21-ம் தேதி மின் நுகர்வு 21 கோடியே 60 லட்சமாகவும், 22-ம் தேதி 19 கோடியே 87 லட் சம் யூனிட்டாகவும் குறைந்து விட்டது. அதாவது மின் நுகர்வு 9 கோடி யூனிட்கள் குறைந்துள்ளது.

இதுகுறித்து எரிசக்தித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் விவசாயத்துக் கான இலவச மின்சாரம் தேவைப்படவில்லை. மழை காரணமாக வீட்டு மின் நுகர்வும் பெருமளவில் குறைந்துவிட்டது. உற்பத்தியும் போதுமானதாக உள்ளதால், தற்போதைக்கு மின் தடை பிரச்சினை இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிந்ததும் மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மழையால் மின்தடை, மின் கம்பிகள் துண்டிப்பு, மின் மாற்றிகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது குறைந்த ஊழியர்களை கொண்ட வட்டங்களில் சவாலாக உள்ளது’’ என்றார்.

மழை காரணமாக மின்விசிறி, குளிர்சாதன இயந்திரத்தின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மின் நுகர்வும் கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in