திருப்பத்தூர் அருகே சாலை விரிவாக்கத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களிலும் பழமையான மரங்கள் வெட்டுவதாக புகார்

திருப்பத்தூர் அருகே சிவல்புரிபட்டி பகுதியில் திண்டுக்கல்-காரைக்குடி சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள்.
திருப்பத்தூர் அருகே சிவல்புரிபட்டி பகுதியில் திண்டுக்கல்-காரைக்குடி சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சாலை விரிவாக்கத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களிலும் பழமையான மரங்களை வெட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை மூன்று கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் முதல் நத்தம் வரை 38 கி.மீ.,க்கு ரூ.240.38 கோடியிலும், நத்தம் முதல் முதல் கொட்டாம்பட்டி வரை 13 கி.மீ.-க்கு ரூ.69.73 கோடியிலும், கொட்டாம்பட்டி முதல் திருப்பத்தூர் வரை 30 கி.மீ.-க்கு ரூ.113.96 கோடியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மேலூர் முதல் காரைக்குடி வரை திருப்பத்தூர் வழியாக நான்வழிச்சாலை பணி நடக்கிறது. இச்சாலையும், திண்டுக்கல்-காரைக்குடி சாலையும் பிள்ளையார்பட்டி அருகே இணைகிறது.

தற்போது காரைக்குடி-திண்டுக்கல் சாலையில் கொட்டாம்பட்டி முதல் திருப்பத்தூர் வரை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் பழைய சாலையின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதுதவிர பழநி பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவதாக 2 அடிக்கடி தனியாக பாதை அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சாலையோர மரங்கள் மட்டுமின்றி சாலைக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் உள்ள பழமையான மரங்களையும் வெட்டி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”இச்சாலையில் ஏராளமான பழமையான மரங்கள் உள்ளன. அவற்றை இனி வளர்ப்பதற்கு சிரமமான விஷயம். அப்படி இருக்கும்போது சாலை விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களில் மட்டும் அகற்றாமல், சம்பந்தமில்லாத இடங்களிலும் மரங்களை வெட்டுவது வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in