

மலேசியாவில் 20 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 2 தமிழர்களைக் கண்டுபிடித்துத்தர மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரியுள்ளனர்.
மலேசியாவில் காணாமல் போன 2 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தில் சனிக்கிழமை செய்தியாளர் களை சந்தித்தனர். அவர்கள் கூறிய தாவது:
கண்டுகொள்ளாத தூதரகங்கள்
மலேசியாவில் நிரந்தரமாக தங்கி சொந்தமாக உணவு விடுதி வைத்திருக்கிறார் சயத் முகமது (49). இவர் தனது உணவு விடுதி தொடக்க விழாவுக்கு சென்னை யில் உள்ள நண்பர் நல்லதம்பியை (49) கடந்த 2012-ம் ஆண்டு செப்டம் பரில் மலேசியாவுக்கு அழைத்துள் ளார். விழாவில் கலந்துகொண்ட பிறகு, செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புவதற்காக சயத் முகமதுவின் காரில் இருவ ரும் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு கிளம்பியுள்ளனர். அதன் பிறகு, அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர்களை கண்டுபிடித்துத் தர கோரி இந்திய தூதரகம், மலேசிய தூதரகம், மலேசிய போலீஸ் ஆகியோரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 20 மாதங்களாகி யும் இரு நாடுகளின் காவல் துறைகள், தூதரகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நல்லதம்பியின் மனைவி தெய்வானை கூறிய தாவது: மலேசியாவில் இருந்து சென்னைக்கு கிளம்பப் போகி றேன். குழந்தைக்குத் தேவை யான பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
காணாமல் போன 12-ம் தேதி இரவு 10 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வந்துவிட்டதாக கடைசியாகப் பேசி னார். அதன் பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் மலேசியாவுக்கு சென்றபோது, என் குழந்தைக்கு 2 வயது. இப்போது 4 வயது ஆகப் போகிறது. அப்பா எங்கே, எப்போ வருவார்னு கேட்டு அழுகிறான். இவ்வாறு தெய் வானை கண்ணீர் மல்க கூறினார்.
மலேசிய போலீஸ் பிடியிலா?
சயத் முகமது மனைவி அக்ரோஷியா பானு கூறும்போது, ‘‘நல்லதம்பியை விமான நிலை யத்தில் வழியனுப்பிவிட்டு வருவ தாகக் கூறி புறப்பட்டார். அது தான் நாங்கள் அவரை கடைசி யாக பார்த்தது. சில சமயங்க ளில் என் கணவரை மலேசிய போலீஸார்தான் வைத்திருக்கி றார்கள் என்று போன் வரும். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் யாரும் எடுப்பதில்லை. காணாமல் போன சில நாட்கள் கழித்து எங் களது கார், விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எந்தப் பொருட்களும் இல்லை’’ என்றார்.
அவர்களை கண்டுபிடித்துத் தர மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கூறினர்.