Published : 04 Nov 2015 08:21 AM
Last Updated : 04 Nov 2015 08:21 AM

சுங்க கட்டண வசூலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

நான்குவழிச் சாலைகளில் சுங்கக் கட்டணத்தை வசூல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்காசி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் தேசிய நெடுஞ் சாலையில் 60 கி.மீ. தொலை வுக்கு ஒரு டோல் கேட் அமைத் துள்ளனர். இந்தச் சாலையை பயன் படுத்துவோரிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பாதுகாப்பாகவும், விரைவாகவும் பயணம் செய்வதற்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆண்டுக்கு ரூ.16,500 கோடி சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசுக்கு சாலை நிதிக்கு ரூ.25 ஆயிரம் கோடி வசூலாகிறது. இது தவிர வாகனங்களின் விற்பனை வரி மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் வருகிறது. இதனால் தனியாக சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டியதில்லை.

மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சாலைப் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்துவது மாநில அரசின் உரிமையாகும். இதனால் மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை வசூல் செய்வது சட்டவிரோதமாகும். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் நேரடி யாகவும், ஏஜென்சிகள் மூலமாக வும் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் துக்கு தடை விதிக்க வேண்டும். சுங்கக் கட்டணம் வசூல் தொடர் பான தேசிய நெடுஞ்சாலை விதி 8 செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிரு பாகரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் புகழேந்தி வாதிட்டனர். பின்னர், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச. 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x