பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் பிப்.28-ல் விண்ணில் பாய்கிறது: 21 செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன

பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் பிப்.28-ல் விண்ணில் பாய்கிறது: 21 செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன
Updated on
1 min read

பிரேசில் நாட்டின் ‘அமேசானியா-1’ உட்பட 21 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் வரும் 28-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உட்பட 21 செயற்கைக் கோள்களை கல்விசார் மற்றும் வர்த்தக ரீதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட்மூலம் இந்த 21 செயற்கைக் கோள்களும் பிப்.28-ம் தேதி காலை 10.23 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளன.

முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா-1, 700 கிலோ எடை கொண்டது. இது பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டது. புவி ஆய்வு மற்றும் அமேசான் காடுகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணியாகும்.

இதுதவிர, இஸ்ரோ தயாரித்த ‘ஐஎன்எஸ்’, இந்திய தனியார் நிறுவனங்களான பிக்ஸல் ஸ்டார்ட்அப் மையத்தின் ‘ஆனந்த்’, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘சதிஷ்சாட்’, சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜி.எச்.ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட ‘யுனிட்டிசாட்’ ஆகியவை இதர முக்கிய செயற்கைக் கோள்கள் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in