

நெடுந்தீவருகே மீன் பிடித்த 8 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இதில் 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தையும், 4 மீனவர்கள் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள், படகுகளுடன் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீன்பிடித்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்தார்.
கைது செய்யப்படும் போது இலங்கைப் பகுதிக்கு அருகே இவர்கள் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 26-ம் தேதி 15 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். பிறகு முதல்வர் அன்றைய தினமே பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.’
இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பாக் ஜலசந்தியில் கச்சத்தீவுப் பகுதியில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது படகு பாறையில் மோதியதால் சேதமடைந்த படகுடன் சிக்கியிருப்பதாக கோபிநாத் தெரிவித்தார்.