வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட கரூர், சிவகங்கை மாவட்டங்களில் அகழாய்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட கரூர், சிவகங்கை மாவட்டங்களில் அகழாய்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பழங்கால வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட கரூர், சிவகங்கை மாவட்டங்களில் அகழாய்வு நடத்தக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ் குமார் , உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி, கரூர் மாவட்டம் தொப்பம்மடை ஆகிய ஊர்களில் 3,000 ஆண்டுகள் பழமையான வட்டக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வட்டக்கற்கள் போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வட்டக்கற்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே, கீழடி ,கொந்தகை, கொடுமணலில் அகழாய்வு மேற்கொண்டது போல், கரூர் தொப்பம்மடை, சிவகங்கை கீழச்செவல்பட்டி கிராமங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளவும், அங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in