Published : 26 Nov 2015 09:18 AM
Last Updated : 26 Nov 2015 09:18 AM

இன்று (நவம்பர் 26) உடல் பருமன் விழிப்புணர்வு நாள்: பருமனற்ற உடலே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது

பருமனற்ற உடலே பாதுகாப்பானது என்பதால், உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மூன்றில் ஒருவர் உடல் எடை யாலும், 5-ல் ஒருவர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் பருமனாக காணப்படுவோர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, இதய நோய், புற்று நோய், பித்தப்பை கல், மலட்டுத்தன்மை, உறக்கமின்மை, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 முதல் 19 வயதுள்ளவர்களில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக் கின்றனர்.

சிறுவர்களும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதற்கு, அவர்கள் மைதானத்தில் விளை யாடுவது குறைந்துவிட்டதும், ஆரோக்கியமற்ற அவசர உணவுகளை அதிகம் உட்கொள் வதுமே முக்கியக் காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த இறகுப்பந்து வீரர் கே.செந்தில்ராஜா கூறும்போது, “சிறுவர்களை விளையாட அனுமதிக்காததால் கோகோ, கண்ணாமூச்சி, குதிரை தாண்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்துவிட்டன. வேறுவழியின்றி கணினி, ஸ்மார்ட் போன் மூலம் விளையாடியும், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தும் பொழுதைக் கழிக்கின்றனர். இவற்றைக் குறைத்து, ஓடி, ஆடி விளையாடினால்தான் உடலில் இருந்து தேவையற்ற நீர் வெளியேற்றப்பட்டு, பசி தூண்டப்படும். உடல் வலிமையாக வும், சீராகவும் இருக்கும்” என்றார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி கூறும்போது, “சராசரி உடலின் தின்ம அளவு (உயரத்துக்கு ஏற்ற எடை) 18.5 முதல் 22.9 வரை இருக்க வேண்டும். 25-லிருந்து 30 வரை இருந்தால் அதிக உடல் எடையுள்ளவராகவும், அதற்கு மேல் இருந்தால் உடல் பருமனுடையவராகவும் இருப்பர்.

உடல் பருமனுடையோர் ரத்த அழுத்தம், சர்க்கரை, சுவாசக் கோளாறு, மூட்டுவலி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவர். உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்டோரில் சுமார் 4 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப் பட்டுள்ளனர். 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 அரசு மருத்துவமனை மற்றும் 61 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 6.3 லட்சம் பேர் ரத்த அழுத்தத்தாலும், 4.5 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், யோகா, உடற்பயிற்சிகளோடு, காய்கறி, கீரைகள், தானியங்கள் போன்ற வற்றை அதிகம் சாப்பிட வேண்டு மென அறிவுறுத்தப்படுகிறது.

உடல் பருமன் எதிர்ப்பு தினத்தை யொட்டி இன்று (நவம்பர் 26) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி ஆலோசனை மையம் அமைத்து, அதன் மூலம் பரிசோதனை மற்றும் ஆலோசனை அளிக்கப்பட உள்ளது” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x