கரும்பு விவசாயிகளுக்கு 5-ம் தேதி நிலுவை தொகை பைசல்: தனியார் சர்க்கரை ஆலை எழுத்துபூர்வ உறுதி

கரும்பு விவசாயிகளுக்கு 5-ம் தேதி நிலுவை தொகை பைசல்: தனியார் சர்க்கரை ஆலை எழுத்துபூர்வ உறுதி
Updated on
2 min read

கரும்புக்கான நிலுவை தொகையை 5-ம் தேதி வழங்குவதாக, மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் ஆலை நிர்வாகம் எழுத்து பூர்வமாக உறுதியளித்துள்ளது. மேலும், 2015-16-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க முடியாது என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரத்தில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றை பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2014-15ம் ஆண்டு சீசனில் ஆலையின் கரும்பு அரவைக்கு விவசாயிகள் கரும்பு வழங்கினர். இந்த கரும்பு களுக்கான விலை ரூ.23 கோடியாகும்.

இதில், ரூ.12 கோடி தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் தவணை முறை யில் வழங்கியது. மேலும், ரூ.11 கோடி நிலுவை தொகையை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், ஓர் ஆண்டு கள் கடந்த நிலையிலும், தொடர்ந்து தவணை கேட்டு நிலுவைத் தொகையை பட்டுவாடா செய்ய வில்லை.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் விவசாயிகள் ஆலையில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டதால், ஆலை நிர்வாகிகள், மின்சாரம் வாரியம் வழங்க வேண்டிய ரூ.24 கோடி நிலுவை தொகை வந்தால் விவசாயி களுக்கான நிலுவை தொகை வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித்து முறையிட்டதன் பேரில், மின் வாரியம் ரூ.10 கோடி அளித்தது. அப்போதும், விவசாயி களுக்கு நிலுவை தொகை கிடைக்கவில்லை.

இதையடுத்து நிலுவைத் தொகை கிடைக்கும் வரை ஆலை யில் தங்கும் போராட்டத்தை கடந்த மாதம் 20-ம் தேதி விவசாயிகள் சங்கம் நடத்தியது. இதைத்தொடர்ந்து முத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி நிலுவை தொகை பெற்றுதருவதாக வருவாய்துறையினர் உறுதி யளித்தனர்.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரி ராஜன் தலைமயில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில், ஆலையின் மேலாண் இயக்குநர் தினேஷ்பாட்டேல், கோட்டாட்சியர் சிவருத்ரய்யா மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில், ஆலை நிர்வாகம் தரப்பில் விவசாயிக ளுக்கான நிலுவை தொகை வரும் 5-ம் தேதி வழங்குவதாகவும், நிலுவை தொகையை வழங்கு வதில் ஏற்பட்ட தாமதத்தினால் விவ சாயிகள் வங்கிக்கு செலுத்த வேண் டிய வட்டி தொகையையும் நிர் வாகமே வழங்கும் என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித் தனர். அதேநேரம் வரும் 2015-16ம் ஆண்டுக்கான கரும்பு அரவைக் காக ஆலையை இயக்க முடி யாது என தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செய லாளர் ரவீந்திரன் கூறிய தாவது: ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வரும் ஆண்டுக்கான 1 லட்சம் டன் கரும்புகளை அரைக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், படாளம் கூட்டுறவு ஆலையில் கரும்புகளை அரைக்க அரசு உத்தரவிட வேண்டும் என, வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரைத்துறை இயக்குநரகம் அதற்கான அனு மதியை பெற்று தருவதாக உறுதி யளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோட்டாட்சியர் சிவருத்ரய்யா கூறும்போது, ‘முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in