Published : 05 Feb 2021 08:01 AM
Last Updated : 05 Feb 2021 08:01 AM

வெடி வைப்பது, அதிக ஆழம் தோண்டுவது; கல் குவாரிகளில் விதி மீறல்கள் தாராளம்: கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்   

மதுரை/திண்டுக்கல்    

எஸ்.ஸ்ரீனிவாசகன் / பி.டி.ரவிச்சந்திரன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குவாரிகளில் நடக்கும் விதி மீறல்களால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதிக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடிப்பதால் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. கனிம வருவாயை உயர்த்தவும், சாலை, கட்டு
மானப் பணிகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும் கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு உரிமம் பெறு
வது, வெடி வைப்பது, அதிக ஆழம்வெட்டி எடுப்பது, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்காதது எனப் பல்வேறு வழிகளில் விதி மீறல்கள் தொடர்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குத்திலிப்பை கிராமத்தில் தனியார் நிறுவனம்குவாரி நடத்துகிறது. விளைநிலங்
கள் உள்ள பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நேரம், காலம் இன்றி வெடிகள் வைத்து தகர்ப்பதால் உயிர் பயத்தால் தோட்ட வேலைக்கு ஆட்கள்வருவதில்லை என்ற குற்றச்சாட்
டும் எழுந்துள்ளது. பாறைகளை வெடி வைத்து தகர்ப்பது, தகர்த்தபாறைகளை ஜல்லிக்கற்கள், கருணை கற்களாக உடைப்பது
என மிகுந்த சப்தத்துடன் செயல்படுவதால் தோட்டங்களில் குடியிருப்பவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து விவசாயி பழனிச்சாமி கூறியதாவது: எனது தோட்டத்தில் சோளம், கம்பு விளைவித்துள்ளேன். இதை பராமரிக்கக் கூலி ஆட்கள் குவாரி பயத்தால் வருவதில்லை. தோட்டத்தில் மாடுகளை மேய்க்க முடியவில்லை. கல் எப்போது வந்து விழும் என்ற அச்சத்தில் இருக்க வேண்டி உள்ளது.

முன்னதாக அறிவித்துவிட்டு செயல்பட்டால் நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று குவாரி ஒப்பந்தம் எடுத்தவர்களிடம் கூறினாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கனிமவளத் துறையினரிடம் குத்திலிப்பை கிராமவிவசாயிகள் சார்பில் புகார் தெரி
வித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மக்களுக்கு உயிர் பாதுகாப்பு இன்மை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இவ்
வாறு அவர் கூறினார்.

மதுரையில் திருமோகூர், திருவாதவூர், தெற்குத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளின் அருகே குவாரி
கள் தாராளமாக செயல்படுகின்றன. வெடி வெடித்து பல கட்டிடங்கள் சேதமடைந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தங்கள் வீட்டுமனைகளை கேட்டவிலைக்கு விற்றுவிட்டு உரிமையாளர்கள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவுதான் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடக்கும் அளவு நிலைமை விபரீதமானது.

இதேபோல் கோவை புறநகர் பகுதியான நாச்சிபாளையம், பிச்சனூர், கிணத்துக்கடவு, மதுக்கரைவட்டாரத்தில் அதிக ஆழத்துக்கு கல் குவாரிகள் தோண்டப்பட்டுள்ளன. வீடுகளில் கடும் அதிர்வுகள் உணரும் வகையில் வெடி வைக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. தூசு, ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக உள்ளது.

கேரளாவில் எம்.சாண்ட், கிராவல் மண், ஜல்லிக் கற்கள் எடுக்க கடும் கட்டுப்பாடு உள்ளது. அதனால் அங்கு நல்ல விலை கிடைப்பதால் கோவை குவாரிகளில் விதி மீறல்கள் தாராளமாக நடக்கிறது. இதே நிலைதான் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்கிறது. இது தொடர்பாகப் புகார் தெரிவிக்க வெளிப்படையான வழிமுறைகள் இல்லை. மக்கள் எளிதாகப் புகாரைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x