

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல மற்றும் கோட்ட அலுவலகங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 339 இ-சேவை மையங்கள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இ-சேவை மையங்கள் மூலம் தமிழக வருவாய்த் துறை மற்றும் சமூகநலத் துறை சார்ந்த 15 லட் சத்து 55 ஆயிரத்து 710 மனுக் கள் பெறப்பட்டு துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 7 லட்சத்து 80 ஆயிரத்து 874 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 28 ஆயிரத்து 658 பேருக்கு கைபேசி எண்/இ-மெயில் முகவரி மாற்றம் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 818 பேர் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இ-சேவை மையங்களின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி நிரந்தர பதிவுக்கு ரூ.50, தேர்வுகளுக்கு ரூ.30, மாறுதலுக்கு ரூ.5, விண்ணப்ப நகலுக்கு ரூ.20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். தேர்வாணையத்துக்கு செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி அதற்கான ஒப்புகை சீட்டை பெறுகிற வசதியும் இ-சேவை மையங்களில் உள்ளது. தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர் கள் இ-சேவை மையத்தை அணுகி பயன் பெறலாம்.