புதுச்சேரியில் நாளை மறுநாள் தியாகராஜர் ஆராதனை: இசை வைபவத்தில் இலவசமாக பங்கேற்கலாம்

புதுச்சேரியில் நாளை மறுநாள் தியாகராஜர் ஆராதனை: இசை வைபவத்தில் இலவசமாக பங்கேற்கலாம்
Updated on
1 min read

புதுச்சேரியில் நாளை மறு நாள் (பிப்.7) தியாகராஜர் ஆராதனை நிகழ்வு நடக்கிறது. பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி யுடன் நாள் முழுவதும் இசை நிகழ்வுகள் நடைபெறுகிறது.

புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகம், தேசிய கலை மையம் மற்றும் அயன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து புதுச்சேரியில் தியாகராஜரின் ஆராதனையை நாளை மறுநாள் (பிப்.7) இசை வைபவமாக நடத்துகிறது.

இந்நிகழ்வு லாஸ்பேட்டை இசிஆர் சாலை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பத்மபூஷன் டாக்டர் டி.வி. கோபாலகிருஷ்ணன் காலை 8.30 மணிக்கு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். பின் காலை 9 மணி முதல்10.15 வரை பஞ்சரத்ன கீர்த்தனை களும் தொடர்ந்து காலை 10.15 முதல் மாலை 5 மணிவரை தனிக் கலைஞர்களின் இசை கச்சேரியும் நடைபெறும். மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதியின் தலைவர் னிவாசன், செயலர் சீதாராமன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதுபற்றி நிகழ்வு ஏற்பாட்டா ளர்கள் கூறுகையில், " தியாகராஜர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர்காலம் கி.பி.1767-1848. திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வளர்ந் தார்.

ஓய்வு நேரத்தில் சங்கீதம் பயின்றாலும் சங்கீத சம்பிரதாயத் தில் சிறுவயதிலேயே நல்ல தேர்ச்சி பெற்றார். 96 கோடி ராம நாம ஜபம் செய்து ராம தரிசனம் பெற்றார். பல ராகங்களில் கீர்த்தனைகள், ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகள் செய்துள்ளார்.

சுமார் 24,000 உருப்படிகள் செய்திருக்கிறார். தவிர இரண்டு இசை நாடகங்கள், பல பஞ்சரத்ன கீர்த்தனைகளையும் செய்துள்ளார். முதன்முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகப்படுத்தியவர் இவரே. சங்கதிகளின் மூலம் கிருதிகளை மிகவும் அழகுற செய்யலாம் என்பதை நிரூபித்தார்.

கர்நாடக இசையில் இவருக்குதான் சிறந்த சீடர்கள் ஏராளம் பேர். வால்மீகியின் மறுபிறப்பு என்று இவரைக் கூறுவர். அவர் 24,000 ஸ்லோகங்களால் ராமாயண காவியத்தை எழுதியுள்ளது போல், இவர் 24,000 கீர்த்தனைகளால் இராமாயணத்தை பாடியுள்ளார். 1847ல் தனது 80 வது வயது வரை இசையால் இராமனைப் போற்றி அனைவரையும் இசையில் கரைய வைத்து இறுதியில் இராமனிடமே கலந்து போனார்.

இப்படிப்பட்ட இசை மஹான் தியாகராஜருக்கு ஆராதனை மாபெறும் இசை வைபவமாக புதுச்சேரியில் முதல்முறையாக நடத்துகிறோம். நிகழ்ச்சியை அனைவரும் கண்டு கேட்டு மகிழவேண்டும் என்பதற்காக அனுமதி இலவசம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in