Published : 04 Feb 2021 08:15 PM
Last Updated : 04 Feb 2021 08:15 PM

தமிழகத்தில் இன்று 494 பேருக்குக் கரோனா; சென்னையில் 149 பேருக்கு பாதிப்பு: 517 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 494 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 360. சென்னையில் 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (பிப். 04) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,467.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 28 ஆயிரத்து 801.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 882.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 360.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 494.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 149.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5 லட்சத்து 7 ஆயிரத்து 889 பேர். பெண்கள் 3 லட்சத்து 32 ஆயிரத்து 437 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 301 பேர். பெண்கள் 193 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 517 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 23 ஆயிரத்து 518 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 375 ஆக உள்ளது. சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 3 பேர். இணை நோய்கள் அல்லாதவர் ஒருவர்".

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x