செ. மாரிமுத்து
செ. மாரிமுத்து

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு

Published on

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக செ. மாரிமுத்து இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இக்த்திருக்கோயிலில் ஏற்கெனவே 7 ஆண்டுகள் இணை ஆணையராக பணியாற்றி வந்த பொன். ஜெயராமன் பணியிட மாறுதலில் சென்றதைத் தொடர்ந்து சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில், வேலூரில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக பணியாற்றிய வந்த செ. மாரிமுத்து, பணியிட மாறுதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக இன்று (பிப். 04) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவருக்கு அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in