Published : 04 Feb 2021 02:19 PM
Last Updated : 04 Feb 2021 02:19 PM

கல்குவாரியில் பாறை சரிவு; சிக்கியிருக்கும் அனைவரையும் உயிரிழப்பு ஏற்படாமல் மீட்க விரைவுப்பணியை மேற்கொள்க: வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் சிக்கியிருக்கும் அனைவரையும் பத்திரமாக மீட்கவும், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் விரைவுப்பணியை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப். 04) வெளியிட்ட அறிக்கை:

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் சிக்கியிருக்கும் அனைவரையும் பத்திரமாக மீட்கக்கூடிய நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் உள்ள குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் சிக்கியவர்களில் 2 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும், சிக்கியுள்ள அனைவரையும் பத்திரமாக மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவினால் கற்குவியலுக்கு இடையில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பாறைச் சரிவில் சிக்கியுள்ள அனைவரையும் போர்க்கால அடிப்படையில் மீட்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கற்களுக்கு இடையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்பணியை இன்னும் விரைவுப்படுத்தி நவீன உத்திகளை கையாண்டு, தொழிலாளர்கள் மீட்கப்பட வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்திட வேண்டும். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.

எனவே, தமிழக அரசு கல்குவாரியில் கற்குவியற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்காக அனைத்து உத்திகளையும் கையாண்டு அவர்களை விரைவில் மீட்பதற்கான பணியை மேலும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x