தங்கம் பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

தங்கம் பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
Updated on
1 min read

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,508 ஆகவும் பவுன் ரூ.20,064 ஆகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.2,488-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.19,904-க்கும் விற்கப்பட்டது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. அண்மையில் ஒரு பவுன் ரூ.22 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்நிலையில், மீண்டும் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.38.90-க்கும், ஒரு கிலோ ரூ.36,345-க்கும் விற்கப்பட்டது. இது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 30 காசுகள் அதிகம்.

தங்கம் விலை குறைந்துள்ளது குறித்து மெட்ராஸ் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘மத்திய அரசு அறிவித்த தங்க டெபாசிட் திட்டங்களால் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in