

தேனி எம்பி. பி.ரவீந்திரநாத் தனது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்த வாழ்த்து பெற்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதி எம்.பி.யுமான பி.ரவீந்திரநாத் தனது 41-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மக்களவை தலைவர் ஓம்பிர்லா ஆகியோர் தங்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று காலை பிரதமர் அலுவலகத்தில், ரவீந்திரநாத் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.